போராட்டங்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக புதிய அறிக்கை
காலிமுகத்திடல் போராட்டங்களுடன் தொடர்புடையவர்களை அவர்களின் இணையப் பதிவுகளுக்காக அரசாங்கம் தொடர்ந்து தடுத்து வைப்பதாகவும், கைது செய்வது மற்றும் அச்சுறுத்துவதாகவும் புதிய அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
2022 ஜூன் 1 முதல் 2023 மே 31 வரையிலான காலத்தில் அரசாங்கம் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் ஐசிசிபிஆர் உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தி போராட்டங்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக புதிய ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கை கூறியுள்ளது.
அவசரகால விதிமுறைகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஜூலையில் அவசரகால விதிமுறைகளை விதித்தார். இது இணையம் உட்பட தவறான தகவல்களை பரப்புவதைத் தடுப்பதன் மூலம் கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்த முயன்றது.
விக்ரமசிங்கவின் அரசாங்கம் தவறான தகவல்களைத் தடுக்க அவசரகாலச் சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அத்துடன் அரகலயா இயக்கத்தைப் பற்றி அறிக்கையிடும் இணைய ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான மிருகத்தனமான அடக்குமுறையைத் தொடர்ந்தது.
அத்துடன் வெளிப்பாடு மற்றும் பயனர் தனியுரிமையை ஆக்கிரமிக்கக்கூடிய வரைவுச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், இலங்கையர்கள் பல்வேறு டிஜிட்டல் செயல்பாட்டின் ஊடாக பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்றனர்.

சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)
நீதிப் பொறிமுறை
மகிந்த ராஜபக்சவின் அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த, 2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில், இலங்கை அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளில் முன்னேற்றங்களை அனுபவித்தது.
எவ்வாறாயினும், 2009இல் தோற்கடிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும், தமிழ் போராளிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் பின்விளைவுகளை தீர்ப்பதற்கு தேவையான நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிசேன நிர்வாகம் தாமதப்போக்கையே கடைப்பிடித்தது என்று புதிய ஃப்ரீடம் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
