இலங்கை மீது சர்வதேச விசாரணையா..! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இடமளிக்காது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இறுதிப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் ஒரு சிறிய இடத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் இருந்தனர்.
அப்போது தாக்குதல் நடத்தினால் பொதுமக்கள் உயிரிழப்பார்கள் என சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் அப்போதைய இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தின.
எனினும், அப்போது தாக்குதலை நிறுத்தக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியினர், கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்” எனத் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




