புதிய காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு: அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு (Photos)

Sri Lanka Politician Jeevan Thondaman Central Province Indian Origin
By Thirumal Sep 07, 2023 02:01 AM GMT
Report

தோட்டத்தொழிலாளர்கள் உட்பட பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு நலன் கருதி இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவில் உதித்த 'ஜீவன சக்தி' காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை செயற்படுத்தி வரும் அமைச்சருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.

பெருந்தோட்டதுறையில் தொழில் நேரத்தில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் மரணங்களை கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்கருதி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவே குறித்த காப்புறுதி திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இறப்பர் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி

இறப்பர் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி

தொழிலாளர் பாதுகாப்பு

பெருந்தோட்ட தொழிலாளருக்கும், அவரின் துணை மற்றும் இரு பிள்ளைகளுக்கு இத்திட்டம் செல்லுபடியாகும். காப்புறுதி காலத்தில் இறப்பு ஏற்பட்டால் 3 லட்சம் ரூபா நிதி வழங்கப்படும். 23 வகையான நோய்களுக்கு காப்புறுதி வழங்கப்படுகின்றது.

புதிய காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு: அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு (Photos) | Insurance Plan For Indian Origins Peoples

குளவிக்கொட்டு உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் - அங்கு தங்கி இருந்து சிகிச்சைபெற்றால் நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்கப்படும். இதர கொடுப்பனவும் வழங்கப்படும்.

இறப்பர் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி

இறப்பர் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி

இந்த காப்புறுதி திட்டத்துக்காக தொழிலாளர் ஒருவர் மாதம் 99 ரூபா செலுத்த வேண்டும். ஆறு மாதம் அல்லது ஒரு வருடகாலப்பகுதியில் நிதி அறவிடப்படும். தொழிலாளர்களை பாதுகாக்கவும், தொழிலாளர்கள் ஏனையோரை தங்கியிருக்கும் நிலையை நிவர்த்தி செய்வது திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.

24,000 அரச ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம்! அமைச்சரின் அறிவிப்பினால் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

24,000 அரச ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம்! அமைச்சரின் அறிவிப்பினால் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

99 ரூபாவுக்கு காப்புறுதி

தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்ல தோட்டத்தில் உள்ளவர்களும், தோட்ட அதிகாரிகளும் இந்த காப்புறுதி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 99 ரூபாதான் ஆரம்பம், பொருளாதார தேவைக்கேற்ப காப்புறுதி திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.

புதிய காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு: அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு (Photos) | Insurance Plan For Indian Origins Peoples

நாளொன்றுக்கு எங்களுக்கு மூன்று ரூபா தான் செலவாகின்றது, ஆனால் தொழிலின் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இது பெரும் உதவியாக இருக்கும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல 99 ரூபாவில் இருந்து திட்டம் உள்ளது, உப தொழில்கள் மூலம் வருமானம் பெறக்கூடியவர்கள் மேலதிக வசதிகளை பெறும் வகையிலும் காப்புறுதி திட்டத்தை வடிவமைத்துக் கொள்வதற்கான வசதியும் உள்ளது.

புதிய காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு: அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு (Photos) | Insurance Plan For Indian Origins Peoples

இன்று ஒரு சிகரெட் கூட 120 ரூபாவுக்கு மேல்தான் விற்கப்படுகின்றது, வெற்றிலை பொதியொன்றின் விலைகூட 50 ரூபா, ஆனால் 99 ரூபாவுக்கு காப்புறுதி கிடைப்பது எவ்வளவு நல்லம்? உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய விடயங்களுக்குகூட பணத்தை செலவிடுபவர்கள், காப்புறுதிக்கு 99 ரூபா செலவிடமாட்டார்களா என்ன என்று தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை, தோட்ட அதிகாரிகள், தோட்ட இளைஞர்கள், சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என பலரும் இத்திட்டத்தை ஆதரித்து, அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு இயற்கை உரம்: றீச்சாவின் மற்றுமொரு புதிய முயற்சி

விவசாயிகளுக்கு இயற்கை உரம்: றீச்சாவின் மற்றுமொரு புதிய முயற்சி

முத்தையா முரளிதரனுக்கு மனோ கணேசனின் அறிவுறுத்தல்

முத்தையா முரளிதரனுக்கு மனோ கணேசனின் அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US