முத்தையா முரளிதரனுக்கு மனோ கணேசனின் அறிவுறுத்தல்
நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள். தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவர உள்ள முன்னோட்ட காணொளியில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மனோ கணேசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மலையக தமிழர் மத்தியில் தடை செய்யப்பட்ட வார்த்தை
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில், தடை செய்யப்பட்ட வார்த்தையை உங்கள் பட முன்னோட்ட "ட்ரைலரில்" பயன்படுத்த வேண்டாம்.
அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து காட்டியுள்ளேன். கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்(Video)
நானே ஒரு கதாசிரியர். எனக்கு இது தெரியும். அந்த இடத்தில் "நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்" என்று போடுங்கள். சரியாக வரும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |