அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்(Video)
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சனல் - 4 ஊடகத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா ஒருசில முக்கியமான விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் இந்த சம்பவம் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர உணவகங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் இந்த தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கின்றது.
EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)
இதேவேளை, ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளதோடு சுரேஷ் சாலேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.