சனல் 4 வெளியிடப்போகும் ஆவணம்: ஒரு வருடத்திற்கு முன் எமது ஊடகத்தில் அம்பலப்படுத்திய முக்கிய இரகசியங்கள் (VIDEO)
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய சனல்-4 முக்கிய காணொளிகளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
அதில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் தொடர்பில் கட்சியின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா இதில் முக்கிய பாத்திரம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் வெளியான தகவல்
இந்நிலையில், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வருடம் (26 July 2022) புலனாய்வுச்செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிள்ளையானின் சகாக்கள் கொலை, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்,மட்டக்களப்பு ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைகள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் சில ஆதாரங்களின் மூலம் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போர் குற்றங்கள் தொடர்பில் கோட்டாபயவிற்கு எதிராக பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கடந்த ஊடறுப்பு நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |