"பிள்ளையானின் முக்கிய சகாவின் சாட்சியத்தால் கைதாகும் ஆபத்தில் கோட்டாபய" (VIDEO)
பிள்ளையானின் சகாக்கள் கொலை,ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்,மட்டக்களப்பு ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைகள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் சில ஆதாரங்களின் மூலம் சிக்கியுள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச்செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இந்த போர் குற்றங்கள் தொடர்பில் கோட்டாபயவிற்கு எதிராக பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில்,விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக 64 பக்கங்களை கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,சிங்கப்பூரில் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச இருப்பாராயின் அவர் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுவார்.
மேலும்,இவர் இரண்டு வாரங்களில் முன்னாள் ஜனாதிபதி எனும் சிறப்புரிமையின் கீழ் கறுப்பு உடை அணிந்த பாதுகாப்பு பிரிவினரினால் கௌரவமாக மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,