மன்னார் நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றவாளிகளுக்கு விளக்கமறியல்
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவு நேற்றையதினம் (26.09.2024) வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாலின் புகைப்படத்தை கொழும்பு பிரதேசங்களில் புகைப்படமாக ஒட்டி அவதூறு ஏற்படுத்தும் வகையில், செயற்பட்ட குற்றச்சாட்டில் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதவான் உத்தரவு
தனிப்பட்ட விடயம் ஒன்றிற்காக அவர்கள் அவ்வாறு நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், குறித்த மூவரும் கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் நேற்று முன்னிலை செய்யப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |