யாழில் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கலைவாணி வீதி, வடலியடைப்பு, பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பாலச்சந்திரன் சங்கீதா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில், அந்த பெண், அடகு வைத்த நகைகளை மீட்கும் நிதி நிறுவனம் ஒன்றிடம் ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டு, நகையை மீட்பதற்காக சென்றுள்ளார்.
இருப்பினும், அந்த பெண்ணின் தொலைபேசி இயங்காத நிலையில், அந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பார்த்தவேளை அவர் தவறான முடிவெடுத்த நிலையில், காணப்பட்டுள்ளார்.

இதன்போது, அங்கு வந்த அயலவர்கள், நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் தான் குறித்த பெண் தவறான முடிவெடுத்துள்ளதாக நினைத்து நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு ஊழியர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam