யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல், நேற்றையதினம் (26.09.2024) யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பலரும் கலந்துகொண்ட நினைவேந்தல்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவில் நினைவேந்தல்
இதேவேளை, தியாகதீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவுநாளை நினைவுகொள்ளும் விதமாக நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து உணவுத் தவிர்ப்பு விழிப்புணர்வுடன், 37வது ஆண்டு நினைவுநாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
