உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் 640 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 625 நோயாளர்களும், கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 பேரும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த நாட்களில் காய்ச்சல் உள்ளவர்கள் வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
