நீதிபதி லபார் மற்றும் இளஞ்செழியனுக்கு அநுர அரசில் நேர்ந்த கதி
தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு, நீதிபதி இளஞ்செழியன் மற்றும் நீதிபதி லபாருக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காமல் பழிவாங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டும் வடக்கின் சிவில் சமூகங்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.
மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்றும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமை சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநியாயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |