ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையென்றால் கூடுதலான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை
அத்துடன், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கமிஷன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |