ராகமை போதனா வைத்தியசாலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மரணம்
கொழும்பு - ராகமை போதனா வைத்தியசாலையில் ஊசி மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார்.
கோ-அமோக்ஸிக்லெவ் என்ற ஊசி மருந்தை செலுத்திய பின்னர் நோயாளியொருவர் உயிரிழந்திருந்தார்.
விசாரணைகள் ஆரம்பம்
இவ்வாறு உயிரிழந்த நபர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.
எனினும் ஊசி மருந்து செலுத்தப்பட்டமையினால் ஏற்பட்ட ஒவ்வாமை மரணத்திற்கு காரணம் என இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |