கிழக்கில் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ள பிள்ளையான்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களை மறைத்துவைத்துள்ள பிள்ளையான் குழுவிடம் உள்ள ஆயுதங்களை என்னால் களையமுடியும் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா(R. Praba) பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கல்லடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஈரோஸ் அமைப்புக்கு அல்லது எங்கள் பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூய்மைப்படுத்தி தருவேன் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
பிள்ளையான் குழு
கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.
'கிழக்கில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பிள்ளையான் குழு ஆகியவற்றிடம் உள்ள ஆயுதங்களை என்னால் களையமுடியும்.
கிழக்கு மாகாண ஆளுனர் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுவருவதன் காரணமாக அவருக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி முன்வரவேண்டும்.
எதிர்வரும் ஓக்ஸ்ட் மாதத்திற்கு முன்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் செயற்படும்.
இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள்,பொரும்பான்மை மக்கள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதியாக தெரிவுசெய்யவேண்டும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |