ராஜபக்சர்களால் மாத்திரமே முடியும்! இந்திக அனுருத்த நம்பிக்கை
நாட்டு மக்களுக்கு நியாயமானதை வழங்கவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ராஜபக்சர்களால் மாத்திரமே முடியும் என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் மாத்திரமே பிரச்சினைகளுக்குப் பதில் சொல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினையை அடையாளம் கண்டு உண்மையான பிரச்சினைக்குப் பதிலளிக்கும் அரசியல் பிரமுகர்கள் இந்த நாட்டில் மிகக் குறைவு.
அவ்வாறு உண்மையான பிரச்சினைக்குத் தீர்வைக் காணக்கூடிய அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பாராயின் அது பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒருவரேயாவார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் மக்களுக்கு நியாயமானதை வழங்குபவர்கள் தற்போதைய பிரதமர் உட்பட இந்த ராஜபக்சர்களே தவிர வேறு யாரும் இல்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு நாம் பொறுப்புடன் கூறுகின்றோம்.
மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் இந்த ராஜபக்சர்களே என கூறியுள்ளார்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri