மறு அறிவித்தல் வரும் வரை ஈரானுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
மறு அறிவித்தல் வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தற்போது ஈரானில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தி இந்தியா புதிய பயண ஆலோசனையை விடுத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்த அவசர ஆலோசனையை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அறிவுறுத்தல்
இதற்கமைய, ஈரானில் தீவிரமடைந்து வரும் போர் மோதல் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு பயணத்திற்காகவும் ஈரானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஈரான் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri