இந்திய வம்சாவளி நபர் கனடாவில் சுட்டுக்கொலை
இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் எட்மண்டனில் (Edmonton) உள்ள குருநானக் சீக்கிய கோவிலின் தலைவரும், பொறியாளருமான பூட்டா சிங் கில் என்பவரே இவ்வாறு கொள்ளப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியான இவர், அல்பேர்ட்டா(Alberta) மாகாணத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக எட்மண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மர்ம நபர் நடத்திய துப்பிக்கிச்சூடு
இந்நிலையில், மர்ம நபர் நடத்திய துப்பிக்கிச்சூட்டில் பூட்டா சிங் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும், சம்பவம் அறிந்து பொலிஸார் சென்றபோது, பூட்டா சிங்கும், மற்றொரு நபரும் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்படி காயமடைந்த மூன்றாவது நபர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனைகள் இன்று மற்றும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூட்டா சிங் கொல்லப்படுவதற்கு முன்பு அவரை மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகள் வந்ததாக அந்நாட்டு ஊடக அறிக்கைகளில் தெரிவிக்க்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
