கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
அதுருகிரிய, கல்வருசாவ வீதியில் அமைந்துள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ (Nawagamuwa) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக நவகமுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் மலர்வளையம் வைத்தமை தொடர்பில் பல சந்தேக நபர்கள் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பாதாள உலக செயற்பாட்டாளர் அச்சுறுத்தல்
வெளிநாட்டிலுள்ள பாதாள உலக செயற்பாட்டாளர் ஒருவர் குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பணத்தை செலுத்தாத காரணத்தினால் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தி அவரை அச்சுறுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
