அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு: கடும் சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அமைச்சர்
பண்டிகைக்காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பண்டிகையை இலக்காகக் கொண்டு வர்த்தகர்கள் பொருட்களின் விலையினை உயர்த்த முற்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் தரமற்ற பொருட்களை நுகர்வோருக்கு வழங்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இனிப்பு பண்டங்களின் விலை அதிகரிப்பு
எனவே இதனை அவதானிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக புத்தாண்டு காலப்பகுதியில் இனிப்புப் பண்டங்களின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam