இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் அதிரடியாக கைது
இலங்கைக் குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, நபரொருவரிடமிருந்து 4,990,000 ரூபாய் பண மோசடி செய்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இலங்கை குடியுரிமை
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, நேற்று பிற்பகல் இந்த குற்றச்சம்பவம் தொடர்பில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜையான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த பண மோசடி தொடர்பில் கிளிநொச்சி பிரிவு விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam