பொலிஸ் நற்சான்றிதழ் பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு
பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி இதன்போது ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பிரச்சினைகளை தெரிவிக்க முடியும்
24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸ் தலைமையகத்தின் விசேட செயல்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், 071 8595946, 071 8595947 மற்றும் 071 8595948 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை
இதேவேளை கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழியில் பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை, பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக நற்சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்