நள்ளிரவு 12.50க்கு ஷிரந்தியை கதிகலங்க வைத்த செய்தி! திணறும் நாமல் மற்றும் தாய்
இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது ராஜபக்சர்கள் மீது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் எத்தனை முறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டாலும், பிணை கிடைக்காத ஒரு நிலையை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
நாமலைத் தொடர்ந்து அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இவ்வாறு அவசர அவசரமாக ஷிரந்தி விமான நிலையத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, FCID அதிகாரிகளால் 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ராஜபக்சர்கள் மத்தியிலும், அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இனி வரும் காலங்களில் ராஜபக்சர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்னும் தீவிரமாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.