அதிக வெப்பநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போதைக்கு நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகளும் ஏற்படுவதாக மனநல வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொடர்ந்து அதிக வெப்பநிலைக்கு ஆட்படுவது கோபத்தை அதிகரிக்கிறது என்பதை மனநலம் குறித்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
வெப்பமான காலநிலை
சாலையில் வாகனம் ஓட்டும்போது மற்றும் பாதசாரிகளாக நடந்து செல்லும்போது ஏற்படும் பல்வேறு மோதல்களில் அதீத கோபம் உண்டாகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மனநல வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், வெப்பத்திற்கு ஆட்படுவதால் குழந்தைகளால் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் மற்றும் அவர்களின் நினைவாற்றல் குறையலாம் என்று மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், அதிக வெப்பநிலையானது குடும்பச் சண்டைகளையும், குடும்ப வன்முறையையும் கூட அதிகரிக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளனர்.