ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 28 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இறுதி முறையாக விசாரணை
அதன்போது கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, குறித்த வழக்கை ஒக்டோபர் 28 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

சந்தேக நபருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இது மோட்டார் வாகனங்கள் அவசரச் சட்டத்தின் கீழ் வரும் வழக்கு என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த வழக்கு ஒக்டோபர் 28 அன்று இறுதி முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.