பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் (25) 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து, இந்தியாவின் நீண்டகாலம் பிரதமராக பதவி வகித்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவி வகித்தவர்களில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பதவிக்காலம்
முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 1964ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி வரை பிரதமராக பதவி வகித்தார்.
ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த நிலையில் 74 வயதான நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி பிரதமராக பதவி திகதி ஏற்றார்.
இன்றைய நிலவரப்படி, மோடி தொடர்ந்து 4,078 நாட்கள் பதவி வகித்து வருகின்றார். இதன் மூலம், 24 ஜனவரி 1966 முதல் 24 மார்ச் 1977 வரை இந்திரா காந்தியின் 4,077 நாள் பதவிக்காலத்தை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 15 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri

மனோஜை கட்டிப்போட்டு ரூமில் அடைத்த குடும்பம், கதறும் ரோஹினி.. இது தேவையா, சிறகடிக்க ஆசை கலகலப்பு எபிசோட் Cineulagam
