இந்திய உயர்ஸ்தானிகர் இன்று யாழில் முக்கிய இடங்களுக்கு விஜயம்!
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நெடுந்தீவுக்கு சென்று திரும்பியுள்ளார்.
நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய உதவியுடனான சூரியசக்தி மின்நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கு இடம்பெறும் தற்போதைய செயல்பாடுகள், குறித்து அங்கிருந்த அதிகாரிகளுடனும் விரிவாகக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இந்த முக்கிய விஜயத்தில், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் , நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந.பிரபாகரன் என பலரும் இணைந்துக் கொண்டுள்ளனர்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
இதேவேளை, வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் எச்.ஈ. சந்தோஷ் ஜா, யாழ்.நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு இன்று (03) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதர் சாய் முரளி மற்றும் தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam