பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி
பாணந்துறை கடற்கரையில் ஜெல்லிமீன்களால் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெல்லி மீன்கள்
காயமடைந்தவர்களில் சிலர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிறிய அளவிலான 300 இற்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் நேற்றைய தினம் பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது அவை பட்டதன் காரணமாக காயமடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலை காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri