தொடர்ச்சியாக சிக்கப்போகும் ராஜபக்சர்கள்! கைது குறித்து தகவல் அறிந்த குடும்பம் - அரசியலுக்கும் அஸ்த்தமனமா..
ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு இனி இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ''ராஜபக்ச குடும்பத்தில் ஒவ்வொருவரும் தான் செய்த மோசடிகளை நன்கு அறிவர். அதனால்தான் தமது கைது குறித்து பதற்றமடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்'' எனவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
அரசியலில் வாய்ப்பில்லை
ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்ச தனது கைது குறித்து தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வந்தமை, தனது கைது குறித்து அவர் நன்கு அறிந்திருந்தமையே ஆகும்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தான் கைது செய்யப்படுவோம் என்பது நன்றாகவே தெரியும். எனினும், தனது கைது குறித்து பிரசாரம் செய்த நாமல் என்ன காரணத்திற்காக தான் கைது செய்யப்படப் போகின்றோம் என்பதை ஒருபோதும் பகிரங்கப்படுத்தியதில்லை.
ஏனைய ராஜபக்சர்களும் தங்களது தவறுகளைத் தாங்களே உணர்ந்திருப்பதால் தான் தங்களுடைய கைதுகளைப் பற்றி பேசுகின்றார்கள்.
அநுராதபுரத்தில் அல்ல நாட்டில் எந்த இடத்தில் பேரணிகளை நடத்தினாலும், நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

நாமல் ராஜபக்ச வந்ததால் ஆதரவு இரட்டிப்பாகும் என்று கூறுவதெல்லாம் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றது. ராஜபக்சர்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் ஒருபோதும் இடமில்லை.
தங்களுடைய குற்றங்களையும், மோசடிகளையும் மறைப்பதற்காகவே மீண்டும் மக்கள் கூட்டங்களை ராஜபக்சர்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். செப்டெம்பர் 12 அல்ல 13,14,15 ஆகிய எந்த திகதிகளிலும் கூட்டங்களை நடத்தினாலும் அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25