தொடருந்து திணைக்களத்திற்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம்
தொடருந்து திணைக்களத்திற்கு 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச துறை ஊழியர்களுக்கான ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவகால பயணச்சீட்டுகளை விநியோகிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து திணைக்களத்திற்குள் நிலவும் மேலதிக வேலைநேர கொடுப்பனவு தொடர்பான தர்க்கநிலைமையே இந்த தாமதத்திற்குக் காரணம் என சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வருமான இழப்பு
ஏப்ரல் மாதத்திற்கான பருவகால பயணச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டதால், மே மாதத்திற்கான பயணச்சீட்டு விற்பனை கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே தொடருந்து திணைக்களத்திற்கு இந்த வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.