இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய ஊடுருவல் தொடர்பில் குற்றச்சாட்டு
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தற்போது வட பகுதியை தாண்டி தென் பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது இவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று(08.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற விடயங்கள் இன்று வடபகுதியில் பூதாகரமான விடயமாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இவ்வாறு இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை தொடர்ந்தும் இடம்பெற்றிருந்த போது நாங்கள் அதனை கண்டித்து போராட்டங்களை நடத்தி அவர்களின் வருகையை கட்டுப்படுத்தி இருந்தோம்.

ஆனால், இந்த தடைக்காலம் முடிந்து ஆறாம் மாதம் முதல் அவர்களின் வருகை மிக மிஞ்சியதாக காணப்படுவதுடன் இலங்கை கடல் எல்லையாக இருக்கின்ற Sea of Sri Lanka கடல் பகுதிக்குள் அவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக அண்மையிலே தீவக கடற்றொழிலாளர்கள் பெரிய அளவிலான கடல் வழிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்கள்.
இருந்த போதிலும் இந்த போராட்டம் எந்த அளவுக்கு அவர்களால் செவிமடுக்க பட்டிருக்கின்றது என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri