இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பில் அதிகரிப்பு
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை மாதத்தில் வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அதற்கமைய இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 2.017% சிறிய உயர்வாகும்.
வெளிநாட்டு கையிருப்பு
கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6,458 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
அதன்படி, 133 மில்லியன் டொலர்கள் அதிகரிப்பைக் காட்டி, கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் மொத்தக் கையிருப்பாக 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் தங்கக் கையிருப்பும் 1 மில்லியன் டொலரால் அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் தங்கக் கையிருப்பாக 191 மில்லியன் டொலர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அது 192 மில்லியன் டொலர்களாக 1 மில்லியனால் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam