பதவி விலக தயாராக இருப்பதாக அநுர அதிரடி அறிவிப்பு
நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தால் நாங்கள் அடுத்த தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பி. டி. சிரிசேன விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற “வேலை செய்வோம் - நாட்டை உருவாக்குவோம்” என்ற தொழிற்சங்க தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை தேசிய மக்கள் சக்திக்கு அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படாது.
பதவி விலகத் தயார்
மக்கள் எங்களுடன் இல்லையென்றால், அடக்குமுறைகளை பயன்படுத்தி நாங்கள் ஆட்சியில் இருக்கவும் மாட்டோம்.

அடுத்த தேர்தலுக்கு செல்லுமாறு மக்கள் கூறினால், நாங்கள் செல்லத் தயாராக இருக்கிறோம்.
நாங்கள் சட்ட திட்டங்களின் மூலம் ஆட்சியில் இருக்கத் தயார் நிலையில் உள்ள ஒரு சக்தியல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri