மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம்! இலங்கையில் ஜனவரி முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
2026ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் நிவாரணம் வழங்க இதுவரை 98 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதிர்வரும் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அறிவித்துள்ளார்.
நேற்று (6) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள்
எதிர்வரும் மாதத்துக்கு பின்னரும் இந்த நிவாரணத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு மோதல் ஆரம்பித்த நாளில் இருந்து எரிபொருள் விநியோகத்தை பாதுகாப்பதற்கும், விலையை நிலையாக பேணுவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய ஒவ்வொரு மாதமும் திறைசேரி ஊடாக நிவாரணம் வழங்கப்படுவதாகவும், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 98 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாதங்களுக்கும் நிவாரணம் வழங்க 41 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதிர்வரும் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என்றும் கூறியுள்ளார்.
YOU MAY LIKE THIS