இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் - உடனடி தீர்வு கோரிக்கை
இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக முன்னெடுத்து வருகின்ற மீன்பிடி நடவடிக்கைகளை முற்று முழுதாக நிறுத்த வேண்டும், அவ்வாறு இல்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டாலும் எந்தவிதத்திலும் அது பயனளிக்காது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(01.70.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய கடற்றொழிலாளர்கள் அதிகாரி மட்டத்திலான பேச்சு என்று பல தடவைகள் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த விடயம் தொடர்பில் இன்று வரை எந்தவித முன் ஆயத்தங்களும் இடம்பெறவில்லை.

அத்துடன், அதிகாரி மட்டத்திலான பேச்சுவார்த்தை என்று ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டு, அது இந்திய தரப்பால் வேறொரு திகதியாக மாற்றப்பட்டது என்று கூறப்பட்டாலும், இன்று வரை அதற்கான எந்தவிதமான முன் ஆயத்தங்கள், அதற்கான திகதி நிர்ணயிக்கப்படாமல் கால நீடிப்பாக இடம்பெறுவதை பார்க்கும் பொழுது இதுவொரு இழுபறி நிலையாகவே பார்க்கப்படுகின்றது.
இந்திய கடற்றொழிலாளர்களால் தொடர்ந்து நஷ்டத்தை அனுபவித்து வரும் இலங்கை மக்களாகிய நாங்கள், எதிர்பார்ப்பது பேச்சுவார்த்தையை அல்ல, மாறாக பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை தான். சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் அவ்வாறு இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது என்றார்.
12 இலட்சம் ரூபாவிற்கு கார் வாங்க நினைத்த மக்களுக்கு நடுரோட்டில் வாகனங்களை பறித்துச் செல்லும் நிலை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை