பல மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு கையளித்த இந்திய இராணுவம்
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், 5.5 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு இலவசமாக வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்த இராணுவப் பொருட்களின் அவசரத் தேவையை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற இந்திய அரசு ஒப்புக்கொண்டதுடன், இந்தப் பொருட்களை இலவசமாக இந்திய கடற்படை கப்பலான INS Sharda மூலம் கொழும்பிற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 பில்லியன் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி
பொருட்கள் கையளிப்பு விழாவில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு) விமான துணை மார்ஷல் சம்பத் துயகொந்த மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை ஆயுதப்படைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், இராணுவ மற்றும் பயிற்சி உதவிப் பொருட்களை வழங்கவும் இலங்கை ரூபாய் 5 பில்லியன் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு மேலாக, டிட்வா புயலின் போது இந்திய இராணுவம் 80 உறுப்பினர்களைக் கொண்ட கள மருத்துவமனையை இலங்கைக்கு அனுப்பியது.
இந்தக் குழு இரண்டு வார காலத்தில் சுமார் 7,000 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியள்ளதுடன் இந்திய இராணுவத்தின் 48 உறுப்பினர்களைக் கொண்ட பொறியியல் பணிக்குழு ஆறு மாதங்களுக்கு மேல் இலங்கையில் பணியாற்றி, ஏழு பாலங்களை நிர்மாணித்ததுடன், சேதமடைந்த அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்து, இலங்கை சாலை அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறியியல் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் மிக வலுவான தூண்களில் ஒன்றாக பயிற்சி திகழ்கிறது.
ஆயுதப்படை பயிற்சி
ஆண்டுதோறும் சுமார் 1,200 இலங்கை ஆயுதப்படை உறுப்பினர்கள் இந்திய ஆயுதப்படை பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர்.
இதற்கு மேலாக, பயிற்றுவிப்பாளர் பரிமாற்றங்கள், தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பாடநெறிகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படும் மொபைல் பயிற்சிக் குழுக்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

சமீபகாலங்களில் இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் இடையிலான தொடர்புகள், இரு நாடுகளுக்குமிடையிலான ஆழமான நட்பு மற்றும் சிறப்பான ஒருங்கிணைப்பு திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
இந்த இராணுவப் பொருட்களின் வழங்கல், இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.
இது இந்தியாவின் “Neighbourhood First” (அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை) கொள்கைக்கும், பிராந்தியத்தின் பாதுகாப்பும் வளர்ச்சியும் அனைவருக்கும் பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றத்துடன் அமைய வேண்டும் என்ற இந்திய பிரதமரின் மகாசாகர்(MAHASAGAR) நோக்கத்திற்கும் ஏற்ப அமைகிறது.



சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri