வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் இலங்கையர்களால் பாரிய அளவிலான நிதி மோசடி
கம்போடியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குழுவொன்றினால் இணையத்தளம் ஊடாக பாரிய அளவிலான நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித வர்த்தகம் மற்றும் கடத்தல் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை சமர்ப்பித்த போதே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நிதி மோசடிகள்
முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தகவல்களை முன்வைத்துள்ளனர்.

அதற்கமைய, தற்போது கம்போடியாவில் தங்கியிருக்கும் இலங்கை பிரஜைகள் குழுவொன்றினால் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யுமாறு பிரதான நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri