எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு..!
உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்து வந்தபோதிலும், தற்போதைக்கு உள்நாட்டில் விலைகளை குறைக்கக் கூடிய சாத்தியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை
தற்போது நாட்டில் நுகரப்பட்டு வருவது இதற்கு முன்னர் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த எரிபொருள் இருப்புக்கள் தீரும் வரை உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் நுகர்வு நிறைவடைந்த பின்னர், எரிபொருள் விலை குறித்து தீர்மானம் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் மானியத்தை நீக்காமல் இதே விலையில் பேணுவதா அல்லது விலையைக் குறைப்பதா என்பது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan