இலங்கை - இந்திய ஆசிய கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியை பார்வையிடவுள்ளோருக்கு அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் 02 விக்கட்டுக்களால் இலங்கை வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெறும் இறுதிப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

நுழைவுச்சீட்டு தொடர்பான விபரம்
இறுதிப் போட்டிக்கான பல நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்றுத் தீர்ந்து விட்டதாகவும், C,D மேல் மற்றும் கீழ் பிரிவுகளில் உள்ள அனைத்து நுழைவுச்சீட்டுகளும் தற்போது விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், A மேல் மற்றும் கீழ், பிரிவு, B மேல் மற்றும் கீழ், மற்றும் பிரதான அரங்கத்தில் நுழைவுச்சீட்டு மட்டுமே வாங்க முடியும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் இரசிகர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam