ஐ.நாவின் விசாரணை வலயத்தில் கருணா - பிள்ளையான் - இனியபாரதி உள்ளிட்ட பல இராணுவ தளபதிகள்(Video)
மனித உரிமை மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில், இலங்கையின் துணை ஆயுதக்குழுக்களின் தலைவர்களுடைய பெயர்களும், முன்னணி இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை இணைப்பாளர் சுதா தெரிவித்தார்.
இலங்கை மீதான ஐ. நாவின் விசாரணை அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள 10 நபர்களின் பெயர்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஐ.நாவின் அறிக்கையில், பிள்ளையான், கருணா இனியபாரதி, டக்லஸ் தேவானந்தா உள்ளிட்ட பல துணை ஆயுத குழுக்களின் தலைவர்களின் பெயர்களும், சவேந்திரசில்வா உள்ளிட்ட பல முன்னணி இராணுவத்தளபதிகள் அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நாவின் அழுத்தங்களும், அதனுள் பெயரிடப்பட்டுள்ள இலங்கை தரப்புக்கள் தொடர்பிலும் முழுமையான விபரங்களை தொகுத்து வருகிறது இன்றைய ஊடறுப்பு...

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 11 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
