இலங்கையை அழிவுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு: உலக தமிழர் பேரவை எச்சரிக்கை

United Nations Ranil Wickremesinghe Sri Lanka Easter Attack Sri Lanka
By Kamal Sep 15, 2023 12:04 PM GMT
Report

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை இலங்கையில் தொடர்வது மேலும் பேரழிவுகளையும் இருளையும் ஏற்படுத்தும் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உலக தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட  அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் வெளியிட்ட காணொளியில் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான அரசாங்க உத்தியோகத்தர்கள் 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்டு உளளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பத்தில் 45 வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட 270 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இனவாதத்தை தூண்டி நாட்டில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியை மீள கைப்பற்றும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video)

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video)

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்

இந்த அதிர்ச்சியான பின்னணி இலங்கையில் வாழும் எவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்காது என்பது வேதனை மிகுந்த யதார்த்தமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் உண்மை இல்லை என்பது அநேகரினால் புரிந்து கொண்ட ஒன்றாகும். உண்மையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன் ஊடாக உயிர்களை காவு கொடுத்து அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதும் கவிழ்ப்பதும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாகவே கருதப்படுகின்றது.

இலங்கையை அழிவுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு: உலக தமிழர் பேரவை எச்சரிக்கை | Global Tamil Forum Easter Attack Crisis Report

இந்த மோசமான கலாச்சாரம் காரணமாக இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பினால், எப்பொழுதும் உண்மையையும் நியாயத்தையும் வழங்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்களும் கத்தோலிக்க தலைவர்களும் விடுக்கும் கோரிக்கைக்கு உலக தமிழர் பேரவை வலுவான ஆதரவை வழங்குகின்றது.

இந்த தருணத்தில் சனல் 4 ஊடகத்தினால் இதற்கு முன்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட கொலைக்களம் என்ற காணொளியை நினைவு கூறுகின்றோம். இலங்கை தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் நிர்வாணமாக கண்கள் கட்டப்பட்ட நிலையில் இலங்கை படையினரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படும் காட்சிகள் இந்த காணொளியில் வெளியிடப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர்

உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர்

மனித உரிமை மீறல்

இந்த விவகாரம் உலக சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் ஐக்கிய நாடுகள் விசாரணைகள் மற்றும் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

எனினும் இலங்கை அரசாங்கம் இந்த காணொளி போலியானது எனவும் இது நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிரான சதித்திட்டம் எனவும் அரசாங்கங்கள் கூறி வந்தன.

இலங்கையை அழிவுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு: உலக தமிழர் பேரவை எச்சரிக்கை | Global Tamil Forum Easter Attack Crisis Report

நாட்டில் இடம் பெற்ற குற்ற செயல்கள் பொருளாதார குற்றச்செயல்கள் என்பனவற்றிற்காக தண்டனை விதிக்கப்படாத நிலைமை அல்லது பொறுப்பு கூற படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குற்றவாளிகளை தண்டிக்க வலியமையற்ற நிலைமை நீடித்து வருகின்றது.

இலங்கையை கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கண்காணித்து வருகின்றது. மீண்டும் ஒரு தடவை இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வால்கர் ட்ரக் கருத்து வெளியிட்டிருந்தார்.

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்: ஜெனிவாவில் பேர்ள் அமைப்பு வலியுறுத்து

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்: ஜெனிவாவில் பேர்ள் அமைப்பு வலியுறுத்து

ஐ.நாவின் அறிக்கை

அண்மையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பயோகங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாது நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை உலக தமிழர் பேரவை வரவேற்பதாகவும் இலங்கை தொடர்ச்சியாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் குறிப்பாக நீதி, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விவகாரங்களில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் குற்ற செயல்களுக்கு பொறுப்பு கூறக்கூடிய ஓர் நிலை உருவாக்கப்படாது.

இலங்கையை அழிவுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு: உலக தமிழர் பேரவை எச்சரிக்கை | Global Tamil Forum Easter Attack Crisis Report

வடக்கு கிழக்கு பகுதியில் நெல் சில பௌத்த பிக்குகள் தமிழர்கள் மீது கடும்போக்கு வாதத்தை கட்டவிழ்த்து விட்டு உள்ளதாகவும் புதிய விகாரைகளை அமைத்து வருவதாகவும், பௌத்தர்கள் இல்லாத பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் தமிழ் மக்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும், அரசாங்கம் இது குறித்து எவ்வித நடக்க வைக்கும் எடுக்கவில்லை.

நில ஆக்கிரமிப்பை தடுக்க தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்

நில ஆக்கிரமிப்பை தடுக்க தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்

சனல் 4 காணொளி

இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கங்கள் காத்திரமான தீர்வு திட்டங்களை வழங்குவதற்கு மாறாக சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் அதிகம் முனைப்பு காட்டி வருகின்றது.

ஆணைக்குழுக்களை நிறுவி அதன் மூலம் காலத்தை விரயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுக்கள் விசாரணைக் குழுக்களை நிறுவி, மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் காத்திரமான தீர்வு திட்டம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.

அண்மையில் சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பிலும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறுவி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளின் உதவியுடன் ஆணைக்குழு நிறுவி அதன் மூலம் காலத்தை விரயமாக்கி இந்த பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் என்பதில் ஐயமில்லை.

இலங்கையை அழிவுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு: உலக தமிழர் பேரவை எச்சரிக்கை | Global Tamil Forum Easter Attack Crisis Report

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை காலமாறு நீதி பொறிமுறை குறித்த விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து செயல்பட்ட போதும் இதே விதமான அணுகுமுறையே பின்பற்றியது.

இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் அமையும் என்பது சந்தேகமேயாகும்.

சனல் 4 ஆவணப்பட விவகாரம்: விசாரணை செய்ய புதிய குழு நியமனம்

சனல் 4 ஆவணப்பட விவகாரம்: விசாரணை செய்ய புதிய குழு நியமனம்


சர்வதேச ரீதியான விசாரணைகளை தவிர்க்கும் அல்லது அவற்றிலிருந்து விடுபடும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கு முனைப்பு காட்டப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியான குற்ற செயல்களுக்கு பொறுப்புக்கூறக் கூடிய ஓர் பின்னணியை உருவாக்குமாறு இலங்கை மக்களிடமும் அதன் தலைவர்களிடமும் கோருகின்றோம். இலங்கையின் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு வழங்காத கலாச்சாரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.'' என தமிழர் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் உள்ளிட்ட இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் உள்ளிட்ட இருவர் கைது

திருகோணமலை துறைமுகத்தில் இந்திய போர்க் கப்பல்

திருகோணமலை துறைமுகத்தில் இந்திய போர்க் கப்பல்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US