சனல் 4 ஆவணப்பட விவகாரம்: விசாரணை செய்ய புதிய குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 வின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.
முதலாம் இணைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை பரிசீலிக்க உயர் நீதிமன்றத்தினால் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மனுக்கள் எதிரவரும், நவம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக இன்று (15.09.2023) நீதிமன்றினால் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு
புவனேக அலுவிஹாரே தலைமையிலான 6 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பாக இது தொடர்பான ஆவணங்கள் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
குறித்த மனுக்களை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பலர் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
