உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் இன்று உயர் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளனர்.
நட்டஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு நட்டஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் அவர்கள் இவ்வாறு முன்னிலையாக உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் சம்பவத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.
எவ்வாறெனினும் சிலர் இந்த நட்டஈட்டுத் தொகையை உரிய முறையில் செலுத்தவில்லை என நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நீதிமன்றை அவமரியாதை செய்துள்ளதாக குறித்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரகாரம் இன்றைய தினம் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
