ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முன்வைக்கப்பட்டுள்ள அமைதி திட்டங்கள்
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் எரிசக்தி மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இந்தியா, துருக்கி, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் திட்டங்கள் வந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.#
கீவ் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைதி திட்டங்கள்
இதில் இந்தியாவின் முன்மொழிவே மிகவும் விரிவானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் திட்டம் உத்தியோகபூர்வமாக பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன:

உக்ரைன் கோரி வரும் அடிப்படையிலேயே, எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் கருங்கடல் துறைமுகங்கள் மீதான தாக்குதல்களை இரு தரப்பும் நிறுத்துதல், கருங்கடல் வழியே தானியங்கள் மற்றும் எரிபொருள் தடங்கலின்றி நகர்வதை உறுதி செய்தல், கருங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் என்பன இந்திய திட்டத்தில் உள்ளடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.