இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மொண்டானா மாநிலத்தின் ஆளுநர்
அமெரிக்காவின் மொண்டானா மாநிலத்தின் ஆளுநர் கிரெக் ஜியான்ஃபோர்டே தனது உயர் மட்டக் குழுவினருடன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த குழுவினர் இன்றையதினம்(09.10.2026) நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
அமெரிக்க விவசாய ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதையும், மொண்டானா தேசிய பாதுகாப்படை மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் அமைகிறது.
புதிய சந்தை வாய்ப்பு
அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மொண்டானா மாநிலம், கொண்டைக்கடலை, பருப்பு வகைகள் மற்றும் பட்டாணி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

இந்தநிலையில் தமது விஜயத்தின் போது, இலங்கை பருப்பு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் சந்திப்புகளை நடத்தி, புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிய அமெரிக்கத் தூதுக்குழு திட்டமிட்டுள்ளது.