19 வயது மகளிர் உலக கிண்ண கிரிக்கட்: இலங்கை இந்திய அணிகள் முன்னிலையில்
2025 ஆம் ஆண்டுக்கான, ஐசிசி மகளிர் 19 வயதுக்குட்பட்டவர்களின் 20க்கு20 உலகக் கிண்ணப்போட்டித் தொடரில், இந்தியாவும் இலங்கையும் முன்னிலை வகிக்கின்றன.
இந்திய அணி, சிறந்த நிகர ஓட்ட விகிதத்துடன் புள்ளிகள் பட்டியலில் தமது குழுவில் முதலிடத்தை வகிக்கிறது.
போட்டி சாதனை
அதே நேரத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை புதிய போட்டி சாதனையை படைத்துள்ளது.

நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இந்திய அணி, மலேசிய அணியை 10 விக்கட்டுக்களால் தோற்கடித்தது.
மேலும், இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 81 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.
இந்தப்போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, அயர்லாந்து, நைஜீரியா, சமோவா, பங்களாதேஸ், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri