யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது
யாழ் (Jaffna) வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தனியார் நிறுவனமொன்றில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் களவு போன சம்பவம் தொடர்பில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், மேலும் இருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூபா 2, 250, 000 பெறுமதியான தங்க நகைகள் மாயமானது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நகைகள் மாயமானது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென கூறிவரும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள், உண்மையான குற்றவாளியை பொலிஸார் கண்டறிந்து தமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்து வந்த நிலையிலேயே, இரண்டு யுவதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |