பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம்(Jaffna)-பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம்(21) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் பொலிஸில் சரணடைந்திருந்தனர்.
சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
சட்டத்தரணி ஒருவர் மூலம் மேற்படி மூன்று சந்தேகநபர்களும் நேற்றுமுன்தினம்(20) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.
இந்நிலையில், மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிவான் மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |