டொலருக்கு எதிராக ரூபாவின் இன்றைய பெறுமதி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(22) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 292.83 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 293.45 ரூபாவாக அதிகரித்துள்ளது.
விற்பனை பெறுமதி
இந்த நிலையில், நேற்றையதினம் 301.33 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 302.02 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360.18 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 374.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.64 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 316.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.37 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 212.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181.86 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 191.31ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam