லண்டன் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட நாமல்
பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, தான் கலந்து கொள்ளவிருந்த உரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் அழுத்தம் காரணமாக கலந்துரையாடல்களை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இருப்பினும் நிபந்தனையின்றி அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் சந்திக்க வாய்ப்பு
தன்னை அழைத்ததற்காக இரு நிர்வாகங்களும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் நாமல் கூறியுள்ளார்.
The traditions of the Oxford Union and the Cambridge Union have, for generations, represented the highest ideals of free inquiry, rigorous debate, and intellectual courage. Speakers invited to these historic forums are expected to face difficult questions, defend their views, and…
— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 23, 2026
ஒக்ஸ்போர்ட் சங்கம் மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களுக்கு அழைக்கப்படும் பேச்சாளர்கள், புத்திசாலித்தனமான மற்றும் விமர்சன ரீதியான பார்வையாளர்களுக்கு முன்னிலையில் கடினமான கேள்விகளை எதிர்கொள்வார்கள் என்றும், தமது கருத்துக்களைப் பாதுகாப்பதோடு மாற்றுக் கருத்துக்களுடன் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழுமியங்களுக்கு மதிப்பளித்தே தாம் இந்த அழைப்பை நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய நேரிட்டது வருத்தத்திற்குரியது.
மேலும், எதிர்காலத்தில் உரையாடல் மற்றும் விவாதங்களை ஊக்குவிக்கும் ஒரு மன்றத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.